ராசிபுரத்தில் மருந்தாளுனருக்கு பாராட்டு விழா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு இ.எஸ்.ஐ" மருத்துவமனையில் பணிபுரிந்த "மருந்தாளுனர் ஏ.ராஜு" அவர்களுக்கு பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தலைமை மருந்தாளுனராக, பணிபுரிய செல்கின்றார்.
ஆகவே மரியாதை நிமிர்த்தமாக வழி அனுப்பும் விழா இ. எஸ்.ஐ. மருத்துவமனையில் "மருத்துவ அலுவலர் டாக்டர் S.சரவணன், தலைமையில் நடைபெற்றது. இதில் செவிலியர் சாந்தி, அலுவலக இளநிலை உதவியாளர் பெரியசாமி, செந்தில்குமார், MNA,T. சிலம்பரசன் மருத்துவப் பணியாளர்கள் பாக்கியராஜ், ஆனந்தன், சூடாமணி ஆகியோர், "மரியாதை செய்து பொன்னாடை நினைவு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார்கள். உடன் ஏற்புறையாக தலைமை மருந்தாளுநர் A.ராஜு" அனைவருக்கும் நினைவு பரிசுகளும், இனிப்பு ,தேநீர், வழங்கினார். தொடர்ந்து அனைவருக்கும் நன்றி உரை ஆற்றினார்.
மேலும் தலைமை மருந்தாளுனர் ஏ. ராஜு அவர்களின் பல்வேறு சீரிய பணிகளை மற்றும் தன்னார்வ தொண்டுகளையும் எடுத்துக் கூறி பெருமை சேர்த்தனர்.