உலக கராத்தே போட்டியில் தங்கம் வென்ற சேலம் மாணவிகளுக்கு பாராட்டு விழா
உலக கராத்தே போட்டியில் தங்கம் வென்ற சேலம் மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
உலக கராத்தே போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் சேலம் குளூனி மெட்ரிக் பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளி, சாரதா மெட்ரிக் பள்ளி மற்றும் குளூனி வித்யா நிகேதன் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் விஸ்மயா, ஜோதிகா, கனிஷ்கா, பவன், ஹரிணி, லக்ஷிதா, சஹானா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாணவிகள் குழு கட்டா போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவிகளை தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளி முதல்வர்கள் ரீனா (குளூனி), செண்பகவள்ளி (சாரதா), ஆரோக்கிய சோபியா (செயின்ட் ஜோசப்), மரிய தெரசா (குளூனி வித்யா நிகேதன்), கராத்தே பயிற்சியாளர்கள் குப்புராஜ், விச்சு, மணி மற்றும் பெற்றோர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் பாராட்டி வாழ்த்தினர். இந்த மாணவிகள் வேல்டு சோட்டாகான் கராத்தே மையத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.