அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

அதிக மதிப்பெண்கள் பெற்ற  மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பரிசு வழங்கல் 

தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சுபாஸ்ரீ சேவா மகளிர் சுய உதவிக் குழு இணைந்து பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

விழாவிற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற தலைவர் மைதிலி செல்வராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் முனைவர் கோ அருள் ஒளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். முன்னதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் பொருளாளர் சாந்தி சரவணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவிற்கு சார்பதிவாளர் குருசாமி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் செயலாளர் காமாட்சி முருகன் ஆகியோர்கள்முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் விஜய சுந்தர் முனைவர் சகாய ராஜன் கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் முனைவர் முருகன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற துணைத் தலைவர் பத்மலதா ராஜ் ஆசிரியை கோமதி நடராஜன் ஆசிரியை மாரியம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

. பத்தாம் வகுப்பு தேர்வில் ஆர்த்தி 483 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் சங்கரேஸ்வரி 480 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் சூரிய தேவ் மற்றும் சப்னம் 470 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று பரிசுகளை பெற்றனர். பதினொன்றாம் வகுப்பில் ஜெகன் 505 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் தனுஜா 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் கோபிகா 477 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றனர். பன்னிரண்டாம் வகுப்பில் ஜனனி 564 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் ரேஷ்மா ரெட்டி 517 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் சிவரஞ்சனி 504 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று கேடயமும் பாராட்டு சான்றிதழும் பெற்றனர். பத்தாம் வகுப்பில் சிறப்பு பரிசும் கேடயமும் பெற்ற மாணவர்கள் ஆகாஷ், பெத்தனேஸ்வரி, ஸ்ரீ வர்ஷினியும், பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பு பரிசு பெற்ற லட்சுமி தனஸ்ரீக்கும் கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. விழா முடிவில் ஆசிரியை தேவி நன்றி கூறினார்.

Tags

Next Story