குமரி மாவட்ட சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு விழா !
பாராட்டு விழா
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் குமரி மாவட்டத்தில் பல துறைகளில் சாதனை படைத்த பெண்மணிகளுக்கு பாராட்டு விழாவும், அ. கிருஷ்ணகுமார் எழுதிய குமரி மாவட்ட சாதனை பெண்மணிகள் 2024 நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது. விழாவுக்கு தமிழ் செம்மல் முழங்குழி பா லாசர் தலைமை தாங்கினார்.
நூலை அய்யாவழி சமுதாய தலைவர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் வெளியிட நலம் கல்வி அறக்கட்டளை தலைவர் மருத்துவர் நலன் குமார் பெற்றுக் கொண்டார். சாதனை பெண்மணிகள் குறித்து ஆசிரியர் திலகம் ஜெயக்குமாரி ஏசுதாஸ் ஆய்வுரை வழங்கினார் .சிறப்பு விருந்தினராக வானொலி புகழ் மங்காவிளை டி ராஜேந்திரன் அன்புவனம் நிர்வாகி பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி, தலைமை ஆசிரியர் எஸ் மந்திரமூர்த்தி குமரி மு. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சாதனைப் பெண்மணிகளை பாராட்டி பேசினார்கள்.
நிகழ்வில் சாதனைப் பெண்மணிகள் ஞானாமிர்தம் ,லட்சுமி தங்கம், அனந்தா ஸ்ரீனிவாசன், கடலம்மா ஜுடி சுந்தர்,ஆசிரியை சு.ப .வீரலட்சுமி, தமிழாசிரியை ஸ்ரீ ரேணுகா ராமச்சந்திரன், வானொலி புகழ் விஜிபுரண் சிங் ஆசிரியை ராஜகிளி , ஷீலா ராஜன், பேராசிரியை கா.பேபி ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சாதனைப் பெண்மணிகள் நூல் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் தக்கலை சந்திரன் உட்பட எழுத்தாளர்கள் மற்றும் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் . தொடர்ந்து நூல் ஆசிரியர் அ.கிருஷ்ணகுமார் ஏற்புரை நிகழ்த்தி நன்றி கூறினார் . நிகழ்ச்சிகளை உலக ஊழல் தடுப்போர் கூட்டமைப்பு இயக்கத் தலைவர் ஆண்டனி மைக்கல் தொகுத்து வழங்கினார்.