பரதநாட்டிய மாணவியருக்கு பாராட்டு
மாணவிகள்
ராமேஸ்வரம் ராமநாதர் சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பரத நாட்டியபோட்டியில் கலந்து கொண்டு பரதநாட்டியமாடிய டி.எம் அகாடமி பயிற்சி பள்ளி மாணவிகளை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமத்தில் உள்ள டி எம் அகாடமி பயிற்சி பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிலம்பம், கராத்தே, பரதநாட்டியம், யோகா உட்பட பல்வேறுகலைகள் பயின்று வருகின்றனர். இந்த அகாடமியை சேர்ந்த ஏராளமான மாணவிகள்,மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்ற பரத நாட்டியபோட்டியில் கலந்து கொண்டு பரதநாட்டியமாடி அசத்தினர். பல்வேறுமாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில், டி எம் அகாடமி மாணவிகளின் சிறந்த பரதநாட்டியத்திற்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பரிசுகள் வென்ற மாணவிகளை அகாடமி நிறுவனர் மீனலோசனி, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story