ஸ்ரீவில்லிபுத்தூர் சித்தமருத்துவத்தில் சிறந்தவர்களுக்கு பாராட்டு வி
செய்தியாளர் சந்திப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சித்த மருத்துவருக்கு வைத்திய ரத்னா விருது வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் சித்த வைத்தியர் அண்ணாமலை ஆனந்த். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சித்த மருத்துவத் துறையில் ஈடுபட்டு வரும் இவர் பல அரிய வகை மூலிகைகளை வைத்து நாள்பட்ட நோய்களுக்கு மருந்து தயாரித்து ஏராளமான நோய்களை குணப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள சித்த மருத்துவர்களுக்கு தனது சொந்த இடத்தில் பல அறிய வகை மூலிகை செடிகளை வளர்த்து அவர்களுக்கு தேவையான மருந்துகளையும் வழங்கி வந்துள்ளார்.
இவரது சேவையை பாராட்டும் விதமாக கேரளாவை சேர்ந்த நாட்டு வைத்திய சாலை என்ற நிறுவனம் இவருக்கு அம்மாநிலத்தில் சித்த மருத்துவர்கள் வழங்கப்படும் உயரிய விருதான சித்த வைத்திய ரத்னா என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளனர்.
தொடர்ந்து இவர் வரும் காலங்களில் நம் அன்றாடம் உண்ணும் உணவில் கலந்துள்ள நச்சுத்தன்மையால் உடலில் உள்ள ராஜஉறுப்புகள் சீராக இயங்காமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளதால் அவற்றை சரி செய்யும் விதமாக புதிய சித்த மருத்துவர்களை உருவாக்குவதற்காக தனது சொந்த செலவில் அவர்களுக்கான சிறப்பு பயிற்சிகளை இலவசமாக அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
கேரளாவில் கொடுவநாடு பகுதியில் இருக்கும் நாட்டு வைத்திய ஆராய்ச்சி நிலையத்தில் கண்களில் காண கிடைக்காத நவபாசன சிலைகளால் ஆன லிங்கம்,குட்டமுனி அகஸ்தியர்,விநாயகர் போன்ற சிலைகளும்,
நவரத்தினக்கல்,சித்த மருத்துவத்தில் அகஸ்தியர்கள் எழுதிய ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.