சக்தி வித்யாலயா பள்ளியில் பாராட்டு விழா

சக்தி வித்யாலயா பள்ளியில் பாராட்டு விழா
X

பாராட்டு விழா

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.

சக்தி வித்யாலயாவில் நடந்த பாராட்டு விழாவிற்கு வருகைபுரிந்த அனைவரையும் ஆசிரியை நளினிமாலா வரவேற்று பேசினார். பள்ளியின் ஆண்டறிக்கையை துணை முதல்வர் ரா.ச.பிரியங்கா வாசித்தார். ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் தேவார பேராசிரியை சாந்திரவிபாலன் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். எல்.கே.ஜி, யூ.கே.ஜி மாணவ, மாணவியர்களின் நடனம், கதை சொல்லுதல், பாடல் பாடுதல், மாறுவேடமணிந்து உரையாற்றுதல், திருக்குறள் ஒப்புவித்தல், மற்ற மாணவ மாணவியர்களின் சிலம்பம், கராத்தே, குத்துச்சண்டை, வாள்வீச்சு, சுருள்வாள் வீச்சு என பல சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கலைநிகழ்ச்சியின் நிறைவில் ஹிந்தி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், தண்ணீரின் முக்கியத்துவம், அதனை பயன்படுத்தும் முறையை பற்றி பேசிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் மேலும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி மாணவ மாணவிகளுக்கு கீரிடம் சூட்டி பாராட்டி பரிசிகளை பள்ளியின் முதல்வர் ஆ.ஜெயாசண்முகம் வழங்கினார்.நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியை கௌரி அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Tags

Next Story