பெரம்பலூர் ஊழியர்களுக்கு பாராட்டு விழா

பாராட்டு விழாவில் பங்கேற்றவர்கள்
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள ரோவர் பள்ளி கூட்டரங்கில், பெரம்பலூர் மாவட்ட அஞ்சல் துறையின் சார்பில், சமூக வளர்ச்சியில் அஞ்சல்துறையின் பங்கு என்ற தலைப்பிலும் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பெரம்பலூர் அஞ்சல் நிலைய அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தபால் நிலைய தபால் தலை விற்பனையாளர் விஷ்ணு தேவன் வரவேற்புரை ஆற்றிய நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர் சௌமியா வரதராஜன் காவல் துறையில் ஓய்வு பெற்ற அதிகாரி அடைக்கலராஜ் மற்றும் இந்தியன் போஸ்டல் வங்கி மேலாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் தலைமை அஞ்சலக உதவியாளர் கௌதமி அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு கணக்கு மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட அஞ்சலக சேவைகள் குறித்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பேசினார்.
இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அஞ்சல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள் ராஜேந்திரன், அறிவுக்கரசன், செல்வ நித்தியா, சுகன்யா, மாகாலட்சுமி, ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி யின்போது உதவி தலைமை அஞ்சல அதிகாரி சுந்தர்ராஜன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோதி உள்ளிட்ட அஞ்சல் துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
