அரித்துவாரமங்கலத்தில் ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா

அரித்துவாரமங்கலத்தில் ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

அரித்துவாரமங்கலத்தில் ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. ஜெ. மோகன் அவர்கள் பணி நிறைவு பாராட்டு விழா அதே பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் முன்னாள் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம், ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.

நெற்பயிரில் வேர் பிடிக்கும் பருவம் போல மாணவர்கள் வந்து விரிந்த பார்வையோடு சமூகத்தை புரிந்து கொள்ளும் பருவம் பள்ளிப் பருவமாகும். உயிர்உரங்கள் பயிருக்கு வலுவூட்டுகின்றன என்றால், சமூகத்தை வளமாக்க உயிரையே உரமாக்குபவர்கள் ஆசிரியர்கள்! சம்பளத்துக்கான வேலை என்று இல்லாமல் சமூகத்திற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் துறைகளில் பணியாற்றுபவர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

வாழ்வியல் வெற்றி, சாதனைகளுக்கு தம்பதியரில் ஒவ்வொருவரின் துணைவரும் பொறுப்பவர். பாராட்டில் அவர்களுக்கும் பங்கு உண்டு. பணியிடத்தில் நிரப்ப முடியாத இடம் என்று எதுவும் இல்லை. நம்முடைய அனுபவம் பின்னால் வரும் சந்ததியரை அந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும்.

அதுதான் நாம் சரியான முறையில் பணியாற்றியதின் அடையாளமாக இருக்க முடியும். பணி நிறைவுக்கு பின்னாலும் சமூகத்தில் நிறைய சேவை மற்றும் வழிகாட்டுதல் பணிகள் காத்திருக்கின்றன என்றார்கள். மே 31 உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, புகையிலை இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம்! என்னும் வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

Tags

Next Story