ஹோலி கிராஸ் பள்ளி மாணவனுக்கு பாராட்டு

X
ஹோலி கிராஸ் பள்ளி
சேலத்தில் நடைபெற்ற விழாவில் ஹோலி கிராஸ் பள்ளி மாணவனுக்கு பாராட்டு
சேலம் ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் மிதுன் கிருஷ்ணா. இவர், என்.சி.சி. கோவை குழுவில் இருந்து புதுடெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதக்கங்களும், சான்றிதழும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். இந்த மாணவரை பள்ளியின் முதல்வர் சேசுராஜ் பாராட்டினார். நிகழ்ச்சியில் மாணவரின் பெற்றோர், என்.சி.சி. அதிகாரி ஆபிரகாம் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் உள்பட பலர் மாணவர் மிதுன் கிருஷ்ணாவை பாராட்டினர்.
Tags
Next Story
