வானூர் அரு நீட் தேர்வில் சாதனை படைத்த ஏழை மாணவிக்கு பாராட்டு

வானூர் அரு நீட் தேர்வில் சாதனை படைத்த ஏழை மாணவிக்கு பாராட்டு
சாதனை படைத்த மாணவி 
வானூர் அரு நீட் தேர்வில் சாதனை படைத்த ஏழை மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

2024-25-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் 13 மொழிகளில் கடந்த மே மாதம் 5-ந்தேதி நடந்தது. இந்த தேர்வு முடிவு ஜூன் 5-ஆம் இரவு வெளியானது.இதில் 5 லட்சத்து 47 ஆயிரத்து 36 மாணவர்கள், 7 லட்சத்து 69 ஆயிரத்து 222 மாணவிகள்,10 திருநங்கைகள் என 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 மாணவ-மாணவிகள் உள்பட 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் - முத்தழகு ஆகிய தம்பதிகளின் மகள் மம்தா, இவர் திண்டிவனத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து, 579 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார், மம்தாவிற்கு சிறு வயது முதலே மருத்துவராக வேண்டுமென்ற கனவு இருந்து வந்துள்ளது இருந்தபோதிலும் குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாக கனவு நிறைவேறுமா என்று விடாமல் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது தந்தையும் இரவு பகல் பாராமல் ஆட்டோ ஓட்டி தனது மகளை எப்படியாவது மருத்துவராகி பார்க்க வேண்டும் என்று கனவோடு மகளை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நீட் கோச்சிங் சென்டரில் சேர்த்து பயிற்சி பெற வைத்துள்ளார்.

இவருக்கு உறுதுணையாக மம்தாவின் தாயார் முத்தழகும் கூலி வேலைக்கு சென்று அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து மம்தாவிற்கு உதவியுள்ளார், பெற்றோர்களின் ஏழ்மையை புரிந்து கொண்ட மம்தா எப்படியாவது நீட் தேர்வில் படித்து தேர்ச்சி பெற வேண்டும் என்று இரவும் பகலும் பராமல் படித்து தற்போது வெளிவந்த நீட் தேர்வில் 720-க்கு 558 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார், இருந்த போதிலும் அரசு கல்லூரியில் சீட் கிடைக்குமா கிடைக்காதா என்ற கண்ணீருடன் காத்துக் கொண்டுள்ளார்.

மேலும் தங்களது குடும்பத்தில் நிலவி வரும் வறுமை காரணமாக தனது படிப்பிற்கு யாராவது உதவி புரிய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் மருத்துவராகி தன்னைப் போன்று கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் எனவும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனவும் நீட் தேர்வு என்பது கடினமான ஒன்றல்ல கனவோடு படித்தால் நிச்சயம் அதில் தேர்ச்சி பெறலாம் என சக மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.

Tags

Next Story