அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர்

ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஜூலை ஏழாம் தேதி அன்று வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம் கிடையாது. மாதந்தோறும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் ரூ. 750 உதவித் தொகை, அரசுப் பள்ளியில் படித்த மாணவியர்களுக்கு கூடுதலாக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படும்,

மேலும் படிப்பிற்கு தேவையான அனைத்து அரசு சலுகைகள் வழங்கப்படுகிறது, இதில் ஒரு வருட தொழிற்பிரிவுகள், Welder, Solar Technician Electrical, Industrial Robotics & Digital Manufacturing Technician, இரண்டு வருட தொழிற்பிரிவுகளான Electrician, Fitter, Machinist, Mechanic Electric Vehicle, Advanced CNC Machining Technician ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு 10- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது குறித்து மேலும் விவரங்கள் www. skilltraining.gov. in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அசல் சான்றிதழ்கள் – T.C, Mark Sheet, Community Certificate, Aadhaar, Passport Size Photo ஆகியவற்றுடன் அரசு வேலை நாட்களில் ஆலத்தூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் உதவி சேர்க்கை மையம் மூலமாக நேரில் வந்து விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், அரசாணை எண். 34 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை நாள் 30.03.2022-ன்படி பத்தாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப் பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 12-ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். மேலும் விபரங்களுக்கு 9499055883, மற்றும் 9385341464 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் மே 31 ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story