பொதுமக்கள் மனுக்கள் மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

பொதுமக்கள் மனுக்கள் மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

பொதுமக்கள் மனுக்கள் மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் பிருந்தாதேவி கூறினார்.


பொதுமக்கள் மனுக்கள் மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் பிருந்தாதேவி கூறினார்.

சேலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். அப்போது அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுக்கு மனுக்கள் பெற்று தீர்வு காணப்படும்.

அதே போன்று முதல் பட்டதாரிச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று, கணினி சிட்டா பெயர் திருத்தம், மின்சார இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், பொது சுகாதாரம், தெரு விளக்கு, சாலை வசதி, பசுமை வீடு, சிறு, குறு விவசாயி சான்று ஆகியவற்றுக்கு மனுக்கள் பெறப்படும். அதன்படி பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சான்றிதழ் வழங்கப்பட்டன தற்போது பெறப்பட்ட மனுக்களில் சிறு, குறு விவசாயி சான்று, முதல் பட்டதாரி சான்று வேண்டி விண்ணப்பித்த 7 பேரின் மனுக்களுக்கு உடனடி தீர்வு கண்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். இதில் உதவி கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், தாசில்தார் தாமோதிரன், நில அளவை உதவி இயக்குனர் ராஜசேகரன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story