மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு

திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு நடைபெற்றது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கக்கூடிய வகையிலான ஊரகத் திறனாய்வு தேர்வு திருப்பூரில் 7 மையங்களில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கூடிய வகையிலான ஊரகத் திறனாய்வு தேர்வு இன்று திருப்பூர் மாவட்டத்தில் ஏழு மையங்களில் நடைபெற்றது. அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலக் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவியர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழக அரசின் சார்பில் கல்வி உதவித்தொகை மாதம் தோறும் வழங்கப்பட உள்ளது.

Tags

Next Story