பர்வதமலையில் தீபம் ஏற்றுவதற்காக கொப்பரைக்கு ஆராதனை
தீப கொப்பரைக்கு ஆராதனை
கலசபாக்கம், நவ.27- கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் உள்ள பருவதமலையில் ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் பிரமராம்பிகை கோவிலின் உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்காக கொப்பரைக்கு ஆராதனை செய்து பெ.சு. தி.சரவணன். எம்எல்ஏ துவங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்ததென்மாதிமங்கலத்தில் உள்ள பருவதமலையில் தீபம் ஏற்றுவதற்காக நெய், காடா வழங்கி கொப்பரைக்கு ஆராதனை செய்து எம்எல்ஏ சரவணன் தலைமையில் துவங்கி வைக்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில் மேலே எடுத்துச் செல்லும் கோயில் பணியாளர்களுக்கு மழைக் காலங்களில் மலை ஏறுவது கடினமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் தீபம் ஏற்றும் கொப்பரை எடுத்து செல்வதால் மலை மீது ஏறும் பொழுது கடினமாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக எடுத்துச் சென்று தீபம் ஏற்றவும் பின்னர் தமிழக அரசு அறிவித்தபடி பக்தர்களுக்கு மலை மீது செல்வதற்கு அனுமதி இல்லாததால், பக்தர்களை மேலே செல்ல அனுமதிக்காதீர்கள். பக்தர்கள் மேலே செல்வதற்கு அனுமதி இல்லாததால் தவறி கூட யாரும் மேலே செல்ல அனுமதிக்காதீர்கள் காவல்துறையிடம் அனுமதி பெற்ற பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குங்கள் இல்லையென்றால் யாரும் யாரையும் அனுமதிக்காதீர்கள் அனைவரையும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கோயில் நிர்வாகத்திற்கும் காவல்துறையினருக்கும் கூறினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் க.சுப்பிரமணியம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அ.சிவகுமார், அரசு கூடுதல் வழக்கறிஞர் கிருஷ்ணராஜ், ஒன்றிய கவுன்சிலர் கலையரசி துரை, பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் வித்தியா பிரசன்னா, வழக்கறிஞர் எழில்மாறன், பத்மாவதி பன்னீர்செல்வம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், மற்றும் கோவில் மாதிமங்கலம், தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம் கிராம மக்கள் பருவத மலையை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர்.