மீண்டும் எம்பியான ஆ.ராசா - சொந்த ஊரில் கொண்டாட்டம்

பெரம்பலூர் அருகே வேலூர் கிராமத்தில், கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கலைஞரின் 101- வது பிறந்தநாள் விழா, மண்ணின் மைந்தன் ஆ.இராசாவின் தேர்தல் வெற்றியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது ....
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசாவின் சொந்த ஊரான, பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கலைஞரின் 101- வது பிறந்தநாள் விழா, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா நீலகிரி பராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றது ஆகிய மூன்று நிகழ்வை கொண்டாடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவரும் ஆ.இராசாவின் சகோதரருமான கலியபெருமாள் தலைமையில் வேலூர் கிராமத்தில் தி.மு.க. கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது, இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வாலிபால் சங்க இணைச்செயலாளர் வி.எஸ். தமிழ்செல்வன்,வேலூர் கிளைச் செயலாளர் ஆனந்த், ஒன்றிய குழு உறுப்பினர் ஷாம் மற்றும் சிவாஜி கணேசன், ராமஜெயம், ராதாகிருஷ்ணன், கோகுல்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story