ஆரணி : மகாவீரர் கோயிலில் மோட்ச உற்சவம்

X
மகாவீரர் மோட்ச உற்சவம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதுக்காமூர் தெருவில் உள்ள ஸ்ரீ 1008 மகா வீரர் ஜினாலயத்தில் 2550-ஆம் ஆண்டு மகாவீரர் மோட்ச உற்சவம் (சமணர்களின் தீபாவளி) நேற்று நடைபெற்றது. இதையொட்டி, ஜினாலயத்தில் பகவான் மகாவீரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான சமண பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, சுவாமி திருவீதி உலா மற்றும் சாந்தி தாரா நடைபெற்றது. சமணர் வீடுகளில் தீப விளக்கேற்றி உற்சாகமாக கொண்டாடினர். மேலும் புதுக்காமூர் சமஸ்த சிராவக, சிராவகியர் தங்களது வீடுகள் முன் பூரண கலசம் வைத்து ஆரத்தி எடுத்து அருள் பெற்றனர்.
Next Story
