ஆரணி நகர் மன்ற கவுன்சிலர்கள் கூட்டம்
நகர் மன்ற கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சி கூட்ட அரங்கில் நகர மன்ற கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் குமரன் அனைவரையும் வரவேற்றார். நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி தலைமை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில்நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டு பகுதிக்கு தேவையான கால்வாய் வசதி, தெரு விளக்கு, சாலை வசதி, உள்ளிட்ட கோரிக்கைகளை எடுத்துரைத்து பேசினர். மேலும் தெரு நாய்கள் சாலையில் சுற்றிதிரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட புகார்களும் விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தீபாவளி முன்னிட்டு பட்டாசு மற்றும் இனிப்புகளை நகர மன்ற தலைவர் மணி வழங்கினார். இதில் துணை தலைவர் பாரி பாபு, நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி, மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story