ஆரணி :ஏரிகுப்பம் சனீஸ்வரன் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை

X
சனீஸ்வர பகவான்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஏரிக்குப்பம் கிராமத்தில் யந்திர வடிவில் சனீஸ்வர பகவான் தாயார் சாயா தேவியுடன் காட்சியளிக்கின்றார். இதில் யந்திர வடிவில் காட்சியளிப்பதால் இந்த ஆலயம் மிகவும் பிரசித்த பெற்ற ஆலயமாகவும் இந்த பகுதியில் விளங்கி வருகின்றன. மேலும் இரண்டரை ஆண்டுக்கு ஓரு முறை நடைபெறும் சனிபெயர்ச்சி விழாவிற்கு திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்துர், தர்மபுரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கர்நாடாக, ஆந்திரா போன்ற வெளி மாநிலத்திலிருந்தும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சனிபெயர்ச்சிக்கு ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரன் பகவான் ஆலயத்திற்கு வருகை புரிவார்கள். மேலும் பக்தர்கள் தெரிவிப்பது என்னவென்றால் வருடம் தோறும் நடைபெறும். விழாவல்ல இது இரண்டரை ஆண்டுக்கு ஓருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சி விழா, ஓவ்வொரு சனிபெயர்ச்சிக்கு இந்த ஆலயத்தில் நெய் விளக்கு ஏற்றி வைத்து சனிபகவானை வழிபட்டால் ,நினைத்த காரியம் நிறைவேறும் என்று பக்தர்களின் ஐதீகமாக உள்ளன. சனீஸ்வரபகவான் டிசம்பர் 20 அன்று மாலை 5.20மணிக்கு மகர ராசியில்லிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைவது குறிப்பிடத்தக்கது.
Next Story
