வைகாசி விசாகத்தை முன்னிட்டு வேல் காவடி ஊர்வலம்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு வேல் காவடி ஊர்வலம்

காவடி ஆட்டம்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் அரசகுளம் பாலமுருகன் கோவிலில் வேல் காவடி ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

முருக பெருமான் பிறந்த நட்சத்திரமான வைகாசி விசாகம் நாளை கொண்டாடும் விதமாக குமரி மாவட்டம் அரசகுளம் பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் வருடாந்திர திருவிழா கடந்த கடந்த 14 ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் நிலையில் விசாகம் நாளான இன்று வேல் காவடி ஊர்வலம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் தாலப்பொலி முத்துக்குடை கும்பம் ஏந்தி மேளதாளத்துடன் ஊர்வலமாக வர முருக பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்தும் பறக்கும் காவடியில் அந்தரத்தில் தொங்கியும் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது இதில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

Tags

Next Story