கல்லூரி மாணவர்களுக்கு தொல்லியல் பயிற்சி

கல்லூரி மாணவர்களுக்கு தொல்லியல் பயிற்சி
பயிற்சி முகாம் 
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு தொல்லியல் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவிகளுக்கு அறநிலையத்துறை சார்பில் 2 நாள் தேசிய அளவிலான சிறப்பு தொல்லியல் பயிற்சி முகாமை நடைபெற்றது. இதில் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் சிற்பக் கலையின் வரலாறு கோயில் சிற்பங்களின் சிறப்புகள் உள்ளிட்டவை குறித்து தொல்லியல் துறை வல்லுநர்கள் கல்லூரி மாணவிகளுக்கும் பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் ஆசிரியர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story