பொம்மராஜபேட்டையில் அர்ச்சுனன் தபசு

பொம்மராஜபேட்டையில் அர்ச்சுனன் தபசு

பொம்மராஜபேட்டையில் அர்ச்சுனன் தபசு

பொம்மராஜபேட்டையில் அமைந்துள்ளது தர்மராஜா உடனுறை திரவுபதியம்மன் கோவில் திருவிழாவில் அரச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

பொதட்டூர்பேட்டை அடுத்த பொம்மராஜபேட்டையில் அமைந்துள்ளது தர்மராஜா உடனுறை திரவுபதியம்மன் கோவில். இந்த கோவிலின் தீமிதி திருவிழா, கடந்த 12ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நடந்து வருகின்றன. பக்தர்கள், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர். இரவு, பகல் என எந்நேரமும் கோவிலில் தங்கியிருந்து சேவை செய்து வருகின்றனர்.

விழாவில், அர்ச்சுனன் வில் வளைப்பு, திரவுபதியம்மன் திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முக்கிய நிகழ்வான அர்ச்சுனன் தபசு நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அர்ச்சுனன் தபசு மேற்கொண்டார். வரும் 28ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நடைபெறும். அன்று மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

Tags

Next Story