பாதிக்கப்பட்ட எங்களுக்கு வெறும் 1000 தானா?: ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு

பாதிக்கப்பட்ட எங்களுக்கு வெறும் 1000 தானா?: ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு
X

டோக்கன்

தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு வெறும் 1000 தானா? கொதித்து எழுந்து ஓட்டப்பிடாரம் அருகே ரேஷன் கடையை திறக்க விடாமல் மூடிய மக்கள் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதி மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகள் நிரம்பி குடியிருப்புகள் சேதம் அடைந்தன. விவசாய நிலங்களில் நீர் தேங்கி விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெடிமேட் ஆடைகள் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதிக்கு தமிழக அரசு ரூ.1000 நிவாரணம் அறிவித்துள்ளது.

கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மற்ற பகுதிகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் நிலையில் தங்களுக்கு 1000 வழங்குவது ஏன் என்று வெகுண்ட மக்கள் எங்களுக்கும் 6000ம் வழங்க வலியுறுத்தி புதியம்புத்தூரில் உள்ள ரேஷன் கடையை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story