வெளிநாட்டில் வேலை’ என்ற பெயரில் சைபர் குற்றங்களில் ஈடுபட அனுப்பப்பட்டார்களா?
விசாரணை
வெளிநாட்டில் வேலை’ என்ற பெயரில் சைபர் குற்றங்களில் ஈடுபட அனுப்பப்பட்டார்களா?. போலீசார் விசாரணை.
வெளிநாட்டில் வேலை என்ற பெயரில் சைபர் குற்றங்களில் ஈடுபட அனுப்பப்பட்டார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் அருண். இவர்சில மாதங்களுக்கு ஏஜெண்டுகள் மூலம் லாவோஸ்நாட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்த ஒரு கும்பல் அவரை அடைத்து வைத்து சைபர் குற்ற செயல்களில் ஈடுபடும்படி அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. பின்னர் இந்திய தூதரகம் மூலம் அவர் சொந்த ஊருக்கு வந்தார். இதுகுறித்து அவர் தம்மம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்து பணம் மோசடியில் ஈடுபட்ட ஏஜெண்டுகள் சென்னையை சேர்ந்த அப்துல்காதர், தஞ்சையை சேர்ந்த சையது ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து போலீசார் கூறும் போது, தாய்லாந்து, லாவோஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணம் மோசடி நடந்துள்ளது. மேலும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் இந்தியாவை சேர்ந்த வாலிபர்களை அங்குள்ள ஏஜெண்டுகள் சைபர் குற்றங்களில் ஈடுபட வைப்பதாக தெரிகிறது. அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். ஆத்தூரை சேர்ந்த அருண் என்பவருடன் 10-க்கும் மேற்பட்டவர்கள் லாவோஸ் நாட்டிற்கு வேலைக்கு சென்று உள்ளனர். அவர்களை அங்கிந்த வெளிநாட்டு ஏஜெண்டுகள் இவர்களை சைபர் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. எனவே மோசடியில் ஈடுபடும் ஏஜெண்டுகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.
Next Story