தில்லைநகரில் மாநகராட்சி மண்டல குழு தலைவர் தலைமையில் பகுதி சபா கூட்டம்

பகுதி சபை கூட்டம்
மனித உரிமை தினத்தை முன்னிட்டு மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.இந்த வகையில் திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் மண்டலம் 2க்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றத்தில் பகுதி சபா கூட்டம் மண்டல குழு தலைவரும், மாமன்ற உறுப்பினருமான விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற இந்தப் பகுதி சபா கூட்டத்தில் மேயர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் வார்டு பொதுமக்கள் தங்களது அடிப்படை தேவை கோரிக்கைகளை மனுக்களாக மேயர் அன்பழகனிடம் அளித்தனர். தொடர்ந்து மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று மாநகராட்சி மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி கண்ணன் ஆகியோர் பொதுமக்களுக்கு உறுதியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் கண்ணன், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், திமுக நிர்வாகிகள், வார்டு மக்கள், குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
