பாஜக கட்சியினர் மற்றும் திமுக கட்சியினர் இடையே வாக்குவாதம்

பாஜக கட்சியினர் மற்றும் திமுக கட்சியினர் இடையே வாக்குவாதம்
பாஜக கட்சியினர் மற்றும் திமுக கட்சியினர் இடையே வாக்குவாதம்.
மதுராந்தகம் அருகே நரேந்திர மோடி நிகழ்ச்சியில் பாஜக கட்சியினர் மற்றும் திமுக கட்சியினர் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பழைய ரயில் நிலையங்களை மறு சீரமைத்தல் மற்றும் சாலை மேம்பாலம் மற்றும் அடி பாலம் புதிதாக அடிகள் நாட்டு விழா இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் உரையாடி துவக்கி வைத்தார். மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் இந்நிகழ்ச்சிக்கான ரயில்வே துறை அதிகாரிகள் மூலம் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு திமுக பிரமுகர்கள் உறுப்பினர் கலந்து கொண்டனர். அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியினர் அவர்களுக்கு முறையாக இருக்கையில் வழங்கப்படவில்லை மேலும் ரயில்வே போர்டு நம்பர் அவர்களுக்கு முறையான வரவேற்பு அளிக்கப்படவில்லை என பாஜக நிர்வாகிகள் ரயில்வே துறை அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது திமுக கட்சியினர் பாஜக கட்சியினர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ரயில்வே அதிகாரிகள் இரு கட்சிகளிடையே சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி பின்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அவர்கள் அங்கு வைக்கப்பட்ட கல்வெட்டினை திறந்து வைத்தார்.. அந்த கல்வெட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பாபு என தவறுதலாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது கல்வெட்டுத் திறந்தும் மீண்டும் சர்ச்சையானது.

ரயில்வே துறை அதிகாரிகள் முறையாக ஏற்பாடு செய்யாது தான் இந்த குழப்பத்துக்கு காரணம் என அரசியல் கட்சியினர் கூறிச் சென்றனர்.

Tags

Next Story