நகர மன்ற கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினர்கள் காரசாரம்

நகர மன்ற கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினர்கள் காரசாரம்

நகர்மன்ற கூட்டம் 

எடப்பாடி நகர்ப்புற பகுதியில் காலி மனைகளுக்கு வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க மற்றும் அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
எடப்பாடி நகராட்சி நகர மன்ற கூட்டம் நேற்று மாலை நகராட்சி கூட்ட அரங்கில் நகர மன்ற தலைவர் டி.எஸ்.எம் பாஷா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் குறித்து அ.தி.மு.க மற்றும் தி.மு.கவினர் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி நகர பகுதியில் உள்ள காலி மனைகளுக்கு வரி விதிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.முருகன், எடப்பாடி நகராட்சி பகுதியில் காலி மனைகளுக்கு அதிகப்படியான வரி விதைக்கப்படுவதாகவும் இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அதனை உடனடியாக சீர் செய்திட வேண்டும் என பேசினார். அதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி ஆணையர் முஸ்தபா,சம்பந்தப்பட்ட நிலப்பகுதிகள் உரிய அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இனி வருங்காலத்தில் வரி நிர்ணயிக்கப்படும் என கூறினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி பகுதியில் மின் விளக்குகள் அமைத்தல், குடிநீர் குழாய்கள் பராமரிப்பு, கழிவுகள் அகற்றல் மற்றும் டெங்கு தடுப்பு உள்ளிட்ட பொது சுகாதாரம் குறித்தும், நகரில் தேங்கும் குப்பைகளை அகற்றுதல், குடிநீர் குழாய்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தீர்மானங்கள் மீது காரசார விவாதங்களுக்கு இடையே 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story