காவல் ஆய்வாளருக்கும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கும் வாக்குவாதம்

வாணியம்பாடி போக்குவரத்து ஆய்வாளர் வெங்கட்ராமனுக்கும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி போக்குவரத்து ஆய்வாளர் வெங்கட்ராமனுக்கும், வாடகை கார் ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு தேர்தல் ஆணையம் விதிமுறைகளை மீறி தேர்தல் பறக்கும் படை பணிக்கு மஞ்சள் நிற பதிவு எண் கொண்ட வாகனத்தை தவிர்த்து, வெள்ளை நிற பதிவு எண் கொண்ட வாகனத்தை பயன்படுத்துவதாக கூறி வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் வாடகை கார் ஓட்டுநர்கள் புகார் மனு.. புகார் அளிக்கும் போது போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.. மக்களவை தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், தேர்தல் ஆணையம் மாவட்டங்களில் சட்டவிரோத பணபரிவர்த்தனையை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகரிகள் தலைமையில் பல்வேறு இடங்களில் கார் மூலம் சோதனை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் விதிமுறைகளை மீறி வெள்ளை நிற பதிவுஎண் (WHITE BOARD) கொண்ட கார்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பயன்படுத்துவதாகவும், தேர்தல் பறக்கும் படையினர் மஞ்சள் நிற பதிவு எண் (YELLOW BOARD) கொண்ட கார்களை பயன்படுத்த வேண்டும் என வேலூர் மக்களவைதொகுதியிற்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் இராம கிருஷ்ணனிடம் , திருப்பத்தூர் மாவட்ட வாடகை கார் ஓட்டுநர்கள் புகார் மனு அளித்தனர். மேலும் இதுகுறித்து வாடகை கார் ஓட்டுநர்கள் தெரிவிக்கையில், நாங்கள் ஆண்டுதோறும் முறையாக கார்களுக்கு எப்.சி மற்றும் வரிகளை செலுத்தி வருவதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் விதிமுறைகளை மீறி சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் கார்களை தேர்தல் பணிக்களுக்கு பயன்படுத்துவதாக இதனால் நாங்கள் பெரும் பொருளாதார இழப்புகளை சந்திப்பதாகவும், இதனால் சொந்த பயனபாட்டிற்கான வாகனங்களை பறிமுதல் செய்து மஞ்சள் நிற பதிவு எண் கொண்ட வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.. மேலும் வாடகை கார் ஓட்டுநர்கள் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் அளித்த போது, போக்குவரத்து ஆய்வாளர் வெங்கட்ராமனுக்கும், வாடகை கார் ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது...

Tags

Next Story