தணிக்கைகுழு கூட்டத்தில் வாக்குவாதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சந்திரப்பட்டி கிராமத்தில் இன்று சிறப்பு கிராம சபை மற்றும் தணிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவை சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர் இன்பசேகரன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் ஏரி வேலை நூறு நாள் திட்ட பணியை சார்ந்த பெண்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுத்திருந்த நிலையில் தணிக்கை குழுவிற்காக மேற்பார்வையாளர் சீனிவாசன் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து கலந்து கொண்டார். அப்போது அந்த வழியாக ஒரு சில ஆண்கள் வந்த நிலையில் ஏதோ கூட்டம் நடைபெறுகிறது என்ற காரணத்தினால் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரியே இன்று என்ன கூட்டம் நடைபெறுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுவதாகவும் அதில் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான தணிக்கை நடைபெற்று வருவதாக தகவல் அறிந்து அவர்கள் சந்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் இன்பசேகரன் மற்றும் அங்கு வந்திருந்த மேற்பார்வையாளர் சீனிவாசன் அவர்களிடமும் 100 நாள் திட்ட ஏரி வேலையில் குளறுபடி நடைபெறுகிறது. இந்த குளறுபடியில் ஊத்தங்கரை சந்திரப்பட்டி பகுதியை சார்ந்த பெண்கள் சிப்காட் பகுதியில் இயங்கிவரும் ஷூ கம்பெனி, ஓலா கம்பெனி, தனியார் பள்ளி, தனியார் நிறுவனம், கர்பினி பெண்கள், வெளியூரில் பணிபுரியும் நபர்கள், இவர்கள் தினந்தோறும் அவரவர்கள் நிறுவனத்தில் ஆங்காங்கே பணிபுரிந்து வருவதாகவும் அவர்களுக்கு அவர்கள் பணியும் இடங்களில் ஒரு அட்டனன்ஸ்சும் 100 நாள் வேலை பணியில் பணிபுரிவதாக சந்திரப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் போலி வருகை பதிவேடு தயார் செய்து அவர்களுக்கு பணிபுரியும் நிர்வாகம் சார்பாகவும் ஏரி வேலை சார்பாகவும் இரட்டை சம்பளம் பெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இறுதி கட்ட நேரத்தில் தகவல் அறிந்து செய்தி சேகரிக்க நாம் சென்றோம் அப்போது அந்த பகுதி ஆண்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திமுகவை சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர் இன்பசேகரன் மற்றும் மேற்பார்வையாளராக அங்கு கலந்து கொண்ட ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பாக சிறப்பு கிராம சபை தணிக்கை கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்பார்வையாளர் சீனிவாசன் ஆகியோர் இந்த கூட்டத்திற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அலுவலகத்திற்குள் சென்று விட்டதாகவும் இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்கு அந்தப் பகுதி சார்ந்த பொதுமக்கள் சார்பாக கலைச்செல்வன் என்பவர் பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில் சுமார் மூன்று முதல் ஆறு வருட காலம் வரையில் சுமார் 25 நபருக்கு மேற்பட்டவர்கள் வெளி மாநிலங்களிலும் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனமான ola கம்பெனியிலும் அதேபோல அங்கு செயல்பட்டு வரும் ஷூ கம்பெனியிலும் பணிபுரிந்து வருவதாகவும் அந்த நபர்களுக்கும் என் ஆர் இ ஜி ஏ திட்டத்தின் கீழ் பணிபுரிவதாக வேலைக்கான அட்டை வழங்கி அதிலும் சம்பளம் வழங்கி வருவதாகவும் அந்த சம்பளத்தில் இரண்டில் ஒரு பகுதியை சந்திரப்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர் திமுகவை சார்ந்த இன்பசேகர் மற்றும் பணி தள பொறுப்பாளர் பெற்று வருவதாகவும் அதே போல அவர் சார்ந்த சமூகத்தை சார்ந்த குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கடந்த 10 ஆண்டுகளாக பணித்தள பொறுப்பாளருக்கான பணி வழங்கி வருவதாகவும் இப்படி பணி வழங்கி வருவதால் மற்ற சாதி சார்ந்த ஏறி வேலை பெண்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் இதனால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல திமுக ஆட்சி செய்யும் நிலையில் அதனை சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர் இன்பசேகரன் மாற்று சாதியினரை மதிப்பதில்லை மாற்று பகுதியில் பணிதள பொறுப்பாளரை நியமிப்பதில்லை என்று அந்த பகுதி சார்ந்த பொதுமக்கள் குற்றத்தை முன்வைத்துள்ளனர். இந்த நிகழ்வால் இதுவரையிலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டுமே 25 நபர்களுக்கு போலி ஏரி வேலை அட்டை வழங்கியதில் சுமார் 30 லட்சத்திற்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து திங்கட்கிழமை நாட்கள் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வெறுமனே விசாரிணை என்ற பெயரில் அதிகாரிகள் வந்து விசாரித்து செல்கின்றனரே தவிர பணித்தள பொறுப்பாளர்களை மாற்றும் நடவடிக்கையோ அல்லது ஊராட்சியில் செயல்படும் ஏரி வேலை திட்டத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்தோ இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்திரப்பட்டி ஊராட்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை தணிக்கை குழு கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்தப் பகுதியில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில் சொல்லாத காரணத்தினால் சிறப்பு கிராம சபை கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறியதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்தார்கள்.