மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் தகராறு: இளைஞர் கொலை: தொழிலாளி கைது

மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் தகராறு: இளைஞர் கொலை: தொழிலாளி கைது

கைது

தஞ்சாவூரில் இளைஞரை கொலை செய்த தொழிலாளி கைது.
தஞ்சாவூரில் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த தொழிலாளியைக் காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மேல அலங்கம் கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் தர்ஷன் (32). இவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வர்ணம் பூசும் தொழிலாளி கே.குணசேகரன் (42) வசித்து வருகிறார். குணசேகரனின் மோட்டார் சைக்கிள் தர்ஷன் வீட்டுப் பகுதியில் நிறுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதேபோல, சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் தர்ஷனை குணசேகரன் கத்தியால் குத்தினார். இதனால் பலத்த காயமடைந்த தர்ஷன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து குணசேகரனைக் கைது செய்தனர்.

Tags

Next Story