போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் - 30 பேர் மீது வழக்கு

போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் - 30 பேர் மீது வழக்கு

பைல் படம் 

சேலம் அருகே தகராறு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 30 பேர் மீது வழக்குப்பதிவு செயப்பட்டது.
சேலம் தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன் கோவில் அருகே சில தினங்களுக்கு முன்பு நடந்த தகராறு தொடர்பாக மூணாங்கரடு கொத்தடிமை காலனியை சேர்ந்த வினோத், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அவர்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். அப்போது அங்கு வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு மறித்தனர். தொடர்ந்து அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட 2 பேரையும் விடுவிக்க வேண்டும் என கூறினர். கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story