தந்தையுடன் தகராறு - 10 ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.
காவல் நிலையம்
கருங்கல் அருகே வண்டாவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சுஜின்.பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.சுஜினும் அவ்வப்போது தந்தையின் கோழிக்கடைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில்,சுஜினுக்கும், தந்தைக் கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று காலை சுஜின் தூக்கில் தொங்கி கயிறு அறுந்த நிலையில் கீழே கிடந்து உள்ளார்.
இதை பார்த்த அவரது தாயார் உடனடியாகவீட்டில் உள்ளவர்களை அழைத்து சுஜினை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கிருந்து கருங்கல் தனியார் ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர்.பின்னர் மேல் சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல். காலேஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் - இன்றி சுஜின் உயிரிழந்தார். கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஜினின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.