சாத்தூர் அருகே இளைஞர் காவல்துறையினரை ஒருமையில் பேசி வாக்குவாதம்

சாத்தூர் அருகே இளைஞர் காவல்துறையினரை ஒருமையில் பேசி வாக்குவாதம்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்

சாத்தூர் அருகே ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர் காவல்துறையினரை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் இவர் வழக்கம்போல் சிவகாசி சாலையில் மாலை 4 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவ்வழியாக சிவகாசி பராசக்தி காலணியைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் வயது 30 தனது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார்.

அப்போது அந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தை நிறுத்திய உதவி ஆய்வாளரை அந்த இளைஞர் திடீரென ஒருமையில் நான் யாரு தெரியுமா என்னுடைய வாகனத்துக்கே அபராதம் போடுறியா அடுத்து என் அப்பா வாகன வரும் அதுக்கும் சேர்த்து அபராதத்தை போடு முதல்ல உன்னுடைய பெயர் என்ன உன்னை என்ன பண்றேன் பாரு, என பேசியபடியே அந்த இளைஞர் தன் கையில் இருந்த தொலைபேசியை கட்சி பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளார். பின்னர் காவல்துறை அதிகாரியிடம் தொலைபேசியை கையில் கொடுப்பது போல் நடித்து மீண்டும் கையில் வாங்கி அந்த கட்சி பிரமுகரிடம் அந்த போலீஸ்காரர் போன கையில வாங்க மாட்டிக்கிறார். அவர் பேரு தமிழ்ச்செல்வன் என்னுடைய வாகனத்தையே நிறுத்திட்டாரு அவர ஏதாவது பண்ணுங்க என பேசி மீண்டும் அந்த இளைஞர் காவல்துறையினரிடம், என்னிடம் நீங்க லஞ்சம் பணம் எதிர்பார்க்கிறீங்க என சாலையின் நடுவே திடீரென நின்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் மிக ஆக்ரோசமாக கத்தி பேசி,

ஏற்கனவே ஹெல்மெட் அணியாமல் நின்று கொண்டிருந்த மற்ற வாகன ஓட்டிகளை இந்த இளைஞர் நீங்க எல்லாம் கிளம்புங்க அபராதம் போடாமல் நான் பார்த்துக்கிறேன், நாளைக்கு இந்த ஆள் வேலையிலேயே இருக்க மாட்டார், என காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் தோணியில்,பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த நிலையில் அந்த நபர் ஆளுங்கட்சியை சேர்ந்தவராக சொல்லப்படுகிறது,

பின்னர் நீண்ட நேரம் கழித்து அந்த நபரைகாவல்துறையினர், வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் அனுப்பி வைக்கவே அருகில் நின்று கொண்டிருந்த மற்ற வாகன ஓட்டிகள் சாமானியனுக்கு ஒரு சட்டம் அரசியல்வாதிக்கு ஒரு சட்டமா என புலம்பியபடியே சென்றனர்,

Tags

Next Story