அரியலூர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்ற ஆட்சியர்
மக்கள்குறைதீர் கூட்டம்
அரியலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்றார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும்.
அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் முதியோர் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 362 மனுக்கள் பெறப்பட்டது. இதனையடுத்து அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார்.
இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story