திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு
திமுக செயற்குழு கூட்டம்
அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார்.
அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைப்பெற்றது மாவட்ட அவைதலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாடு குறித்தும், கூட்டுறவு சங்க தேர்தல் குறித்தும் கலந்து ஆலோசிக்கபட்டது. மேலும் ஒன்றியம் தோறும் வாக்குசாவடி உறுப்பினர்கள் கூட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கபட்டது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story