அரியமான் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

அரியமான் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

உலக பெருங்கடல்கள் தினத்தை அரியமான் கடற்கரை சுத்தப்படுத்தப்பட்டு அரசமர கன்றுகள் நடப்பட்டன.  

உலக பெருங்கடல்கள் தினத்தை முன்னிட்டு அரியமான் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது.

உலக பெருங்கடல்கள் தினம் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 166 ஆவது வார நிகழ்வாக உலக பெருங்கடல்கள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையை தூய்மை செய்யும் பணி மற்றும் மரம் நடுதல் விதைப் பந்து தூவுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகரும் தலைமை ஆசிரியருமான தென்னவன் தலைமை வகித்தார். ஆலோசகர் பிரபு வரவேற்றார். ஆலோசகர் பாண்டி முன்னிலை வகித்தார். உறுப்பினர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார் .

சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு கடல்களின் முக்கியத்துவம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் உரை நிகழ்த்தினார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக காவல் ஆய்வாளர் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. நிகழ்விற்கு தேவையான அரசமரம் மற்றும் வலைகளை ஒத்தக்கடை ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் வழங்கினார். காவல் ஆய்வாளர், பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் அரியமான் கடற்கரையில் அரசமரம் நடப்பட்டது. காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் கொடியசைத்து தூய்மை பணியை தொடங்கி வைத்தார் ஆலோசகர்கள் உறுப்பினர்கள் குழந்தைகள் கடற்கரையில் தூக்கி வீசப்பட்ட நெகிழி பைகள் தண்ணீர் பாட்டில்கள் முதலியவற்றை சேகரித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

விழாவில் காவலர் முரளி, வனவர் மாதவன் மற்றும் ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் செல்வி, ஸ்டெல்லா மேரி, பரமேஸ்வரன், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை பணியை செய்தனர். நிகழ்விற்கு தேவையான ஏற்பாடுகளை நல்லோர் குழுவை சேர்ந்த அறிவழகன் மற்றும் குழு உறுப்பினர்கள் செய்தனர். உறுப்பினர் சிவா நன்றி கூறினார்.

Tags

Next Story