அரியமங்கலம் ; மயங்கி விழுந்த கேங்மேன் பலி

X
கேங்மேன் பலி
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் ஆக பணியாற்றியவர் மாரடைப்பால் மரணம். போலீசார் வழக்கு பதிவு
திருச்சி அரியமங்கலம் நேருஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (56) தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வேலைக்கு சென்ற அவர் சீருடைகளை கழட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாரியப்பனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் மாரியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
