அரியநாயகி அம்மன் கோவில் குள மேம்பாட்டு பணி - அமைச்சர் ஆய்வு

அரியநாயகி அம்மன் கோவில் குள மேம்பாட்டு பணி - அமைச்சர் ஆய்வு

அமைச்சர் ஆய்வு 

அரிமளம் அரியநாயகி அம்மன் திருக்கோயில் நடைபெற்று வரும் குள மேம்பாட்டு பணியினை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், அரியநாயகி அம்மன் திருக்கோயில் குளம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பார்வையிட்டார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story