சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு
X

அரியர் தேர்வு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது
பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இணைவு பெற்ற கலை அறிவியல் கல்லூரிகளில் படித்த இளநிலை, முதுநிலை, மாணவர்களுக்கான அரியர் சிறப்பு தேர்வுகள் வருகிற 12-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. சிறப்பு தேர்வுக்கான கால அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவு சீட்டினை அவர்கள் பயின்ற கல்லூரிகளின் வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தேர்வுகள் அனைத்தும் பெரியார் பல்கலைக்கழகத்தின் எதிரில் உள்ள பத்மவாணி மகளிர் கலை கல்லூரியில் நடைபெறும் என்று பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story