பட ரிலீசுக்கு திமுகவின் ஆதரவிற்காக விஜய் நீட்டை எதிர்க்கிறார் - அர்ஜுன் சம்பத்

விஜய் ஜோசப் இன்னொரு கமல்ஹாசனாக மாறி வருகிறார். அடுத்த படம் ரிலீஸ் செய்வதற்காக திமுக சார்பாக நீட் தேர்வை பற்றி பேசிவருகிறார். தமிழகத்தில்தான் அதிக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்வு பெறுகின்றனர் என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையில் ஜூலை 21 இல் சூரசம்ஹார மாநாடு நடைபெறுவதையொட்டி அதற்கான அழைப்பிதழ் வெளியீடு நிகழ்வுக்கு வந்திருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியது சுவாமிமலைக்கு சொந்தமான அய்யனார் கோயில் இடத்தை பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா பெயரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அறநிலையத்துறையின் கொடுத்த புகார் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபநாசம் கோயிலுக்கு அருகில் அஸ்திவாரம் தோண்டும் போது திருமேனிகள் கிடைத்துள்ள அந்த இடத்தை கையகப்படுத்தி திருமேனிகளை அந்த வளாகத்தில் வைத்தே வழிபாடு செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய சட்டங்களை எதிர்த்து போராட முதல்வர் ஸ்டாலின் ஒருபக்கம் வரவேற்று பயிற்சி கொடுத்தும், மறுபுறம் திமுக, விடுதலை சிறுத்தை வழக்கறிஞர்களை வைத்து போராடவும் தூண்டி விடுகிறார். விஜய் ஜோசப் இன்னொரு கமல்ஹாசனாக மாறி வருகிறார். அடுத்த படம் ரிலீஸ் செய்வதற்காக திமுக சார்பாக நீட் தேர்வை பற்றி பேசிவருகிறார். தமிழகத்தில்தான் அதிக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்வு பெறுகின்றனர்.திமுக ஆட்சியில்தான் விஜயகாந்த் மண்டபம் இடிக்கப்பட்டதை மறக்க கூடாது. பட்டம் பெறுவது பற்றி ஆர்.எஸ் பாரதி பேச்சு கண்டிக்கத்தக்கது என்றார். நிகழ்வின் போது மாநில பொதுச்செயலாளர் டி. குருமூர்த்தி, மாவட்ட தலைவர் லோகசெல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story