மதுராந்தகம் அருகே அர்ஜுனன் தபசு விழா

மதுராந்தகம் அருகே நடைபெற்ற அர்ஜுனன் தபசு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வடதமிழ்நாட்டில் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாக திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த பெருவிழா இருந்து வருகிறது. பத்து நாட்களுக்கு மேல் நடைபெறும் இந்த அக்னி வசந்த விழாவில் மகாபாரத தெருக்கூத்துகள் சொற்பொழிவுகள் ஆகியவை நடைபெறுவது வழக்கம்.. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கிளியாநகர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் அக்னி வசந்த் விழா கடந்த மாதம் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பகல் வேலைகளில் மகாபாரத சொற்பொழிவு , இரவு நேரங்களில் கட்டைக்கூத்து நடைபெற்று வந்தது. தினமும் மகாபாரதத்தில் வரும் கதைகள் தொடர்பாக கூத்துகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் இன்று 15 நாளாமான இன்று அர்ஜுன தவசு நிகழ்ச்சி நடைபெற்றது. அக்னி வசந்த விழாவில் மிக முக்கிய நிகழ்வாக அர்ஜுனன் தபசு‌ விழா பார்க்கப்படுகிறது. இந்த திருவிழாவில் அர்ஜுனன் வேடம் அடைந்த தெருக்கூத்து கலைஞர் தபசு மரம் ஏறி சிவபெருமானை வழிபட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். இந்த விழா திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story