அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி ஆயுதப்படை காவலர் காயம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பைய நாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்தவர் மாயக்கண்ணன். இவர் தற்போது தண்டனை அலுவலக விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் ஆயுதப்படை வளாகத்திற்கு பணி காரணமாக கடந்த 29ஆம் தேதி மாலை விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆயுதப்படை ஆர்ச் எதிரே சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது அதை சாலையில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த இருசக்கர வாகனம் மாயக்கண்ணன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மாயக்கண்ணன் காயமடைந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டி இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த மாயக்கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகனம் குறித்து சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.