வாக்குப்பதிவு இயந்திர அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திர அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு 

சேலத்தில் பெயர்,சின்னம் பொருத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 25 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலையொட்டி கட்சிகளை சேர்ந்தவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதனால் தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்த வெளிநபர்கள் தொகுதியில் இருந்து வெளியேறினர்.

இதனிடையே தேர்தலுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருப்பதால் வாக்குப்பதிவிற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அம்மாபேட்டையில் உள்ள கணேஷ் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன. அந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் படத்துடன் பெயர், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் பொருத்தப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ள அறையில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Tags

Next Story