கலவை அருகே இருசக்கர வாகன விபத்தில் இராணுவ வீரர் பலி

கலவை அருகே இருசக்கர வாகன விபத்தில் இராணுவ வீரர் பலி
X

ராணுவ வீரர் முணியாண்டி 

கலவை அருகே புளிய மரத்தில் மோதிஇருசக்கர வாகன விபத்தில் இராணுவ வீரர் பலி.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த கலவை கணியனூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற பெற்ற ராணுவ வீரர் திரு. முணியாண்டி (வயது 54) என்பவர் திமிரி -கலவை செல்லும் சாலையில் கீழ்பாடி கூட்ரோடு அருகே தனது மோட்டார் சைக்கிளில் விவசாய நிலத்திற்கு சென்று திரும்பிய போது சாலை ஓரம் இருந்த புளிய மரத்தில் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திமிரி போலீசார் முனியாண்டியின் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து திமிரி காவல் ஆய்வாளர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags

Next Story