ஜல்லிக்கட்டை காண ஏற்பாடு - ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி

கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
கடந்த 24ஆம் தேதி மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் தமிழக முதல்வர் ஏறுதழுவுதல் அரங்கை துவக்கி வைத்து முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தவளும் மாற்றுத்திறனாளிகள் காணும் வன்னம் மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்த நிலையில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்த மகிழ்ச்சியில் நேற்று நன்றி தெரிவிக்கும் வண்ணம் தவளும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்தனர். தொடர்ந்து வரக்கூடிய நாட்களில் கீழக்கரை ஏறு தழுவுதல் அரங்கில் நடைபெறும் போட்டிகளில் தவழும் மாற்றுத்திறனாளிகள் காணும் வண்ணம் அந்த இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகவே அந்த இடம் பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிக்கப்படும் என்று மாற்றுத்திறனாளிகளிடம் உறுதி அளித்தார்.

Tags

Next Story