பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயற்சி - 2 பேர் கைது

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயற்சி - 2 பேர் கைது

கைது

அஞ்சுகிராமம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயற்சி செய்ததால் 2 பேர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த கனகப்பபுரம் அரசு பள்ளி அருகில் மாணவ மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து உதவி ஆய்வாளர் எட்வர்ட் பிரைட் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ரூபாய் 200 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கைது செய்து காவல் நிலையத்தில் விசாரித்த போது, ஒருவர் பால்குளம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த இசக்கிமுத்து (25)என்பதும் இன்னொருவர் கொட்டாரம் நாராயணன் புதூரை சேர்ந்த அஜித்குமார் (28) என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவர்கள் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர் . தொடர் விசாரணையில் இவர்கள் மீது கன்னியாகுமரி, சுசீந்திரம், கோட்டார் உள்ளிட்ட குமரி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, திருட்டு, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது என்பதும் தெரியவந்தது.

Tags

Read MoreRead Less
Next Story