அனுமதியின்றி மண் எடுத்து விற்றவர் கைது

அனுமதியின்றி மண் எடுத்து விற்றவர் கைது

மணல் விற்பனை 

அரூர் தீர்த்தமலை அருகே அனுமதி இன்றி மண் எடுத்து விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தீர்த்த மலையில் அனுமதியின்றி மண் எடுத்து விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் உத்தரவின் பேரில், தீர்த்தமலை வருவாய் ஆய்வாளர் சத்யபிரியா கிராம நிர்வாக அலுவலர் ஆதிநாராயணன் ஆகியோர் தீர்த்த மலை அடுத்த பாளையம் பகுதிக்கு சென்றனர்.அங்கு, சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்து டிப்பர் லாரியில் நிரப்பி கொண்டிருந்தனர் வருவாய் துறையினரை பார்த்ததும் லாரி ஓட்டுநர் அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பொக்லைன் ஓட்டுநர் குமாரை பிடித்து விசா ரித்ததில், வாகன உரிமையாளர் ஸ்ரீகண்ணன், பாளையம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரது நிலத்திலிருந்து மண் எடுத்து தீர்த்தமலை பகுதியில் விற்பனை செய் வதற்காக எடுத்து செல்வதாக கூறினார்.விற்பனை செய்ய உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை விசாரித்ததில் உரிய அனுமதியின்றி மண் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் டிப்பர் லாரி, ஒரு யூனிட் மண் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் ஓட்டுநர் குமாரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர். வாகன உரிமையாளர் லாரி ஓட்டுநர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Tags

Next Story