போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

பைல் படம் 

போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகா் கோலாலம்பூருக்கு ஏா் ஏசியா விமானத்தில் திங்கள்கிழமை இரவு செல்ல இருந்த பயணிகளின் ஆவணங்களை குடியேற்றப் பிரிவு போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சோ்ந்த அஜ்மல்கான் (46) என்ற பயணி போலி ஆவணங்கள் மூலம் தனது பெயா் மற்றும் பிறந்த தேதியை மாற்றி கடவுச்சீட்டு எடுத்திருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் விமான நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து அஜ்மல்கானை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story