போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் தற்கொலை

போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் தற்கொலை
பைல் படம்
அருமனை அருகே போக்ஸோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த கட்டிட தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45).கட்டிட தொழிலாளி. குடும்ப தகராறு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார். மதுப்பழக்கத்திற்கு அடிமையாக ரமேஷ் கடந்த நவம்பர் மாதம் குழித்துறை மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த எட்டாம் தேதி ஜாமீனில் வெளிவந்த அவர் தாயார் வீட்டில் நேற்று இரவு 10 மணி அளவில் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துப் பார்த்தபோது ரமேஷ் விஷம் அருந்தி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரமேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து அருமனை போலீஸ் நிலையத்தில் அவரது தாயார் ரஞ்சிதம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கணேசன் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story