குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
கைது
தஞ்சை மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், காரைக்கால் சாலை பழவத்தான்கட்டளை பாரதி நகர் வடக்கு என்ற முகவரில் வசிக்கும் ராவணன் என்பவரின் மகன் சரண்ராஜ் (வயது 22) என்பவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் பரிந்துரையின் பேரிலும், நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் சுகுணா தாக்கல் செய்த ஆணை உறுதி ஆவணம் மற்றும் இதர ஆவணங்களில் அடிப்படையில், சரண்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, அவரை காவல்துறையினர் கைது செய்து கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
Next Story